Category: செய்திகள்

புதிய ரேஷன் கார்டுக்கு வெயிட் பண்ணுறீங்களா? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.

இணைய வசதி பயன்படுத்த முடியாதவர்கள் நேரடி முறையிலும் விண்ணப்பிக்கலாம். அதற்காக அருகிலுள்ள உணவு வழங்கல் அலுவலகம் அல்லது தாலுகா அளவிலான ரேஷன் சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்று நிரப்ப வேண்டும். தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது…

தோல்வியைக் கண்டு துவண்டுவிட மாட்டோம்; சுவரில் அடித்த பந்தாக மீண்டு வருவோம்: ஸ்டாலின் சூளுரை.

தேர்தல் தோல்விகளால் தி.மு.க ஒருபோதும் துவண்டுவிடாது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், சுவரில் அடித்த பந்து போல திமுக முன்பை விட அதிக வேகத்துடன் (Bounce back) மீண்டும் களத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.…

பள்ளி பெயர்களில் சாதிய அடையாளங்கள்… தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரை கிளை உத்தரவு.

பள்ளி மற்றும் விடுதிகளின் பெயர்களில் உள்ள சாதிய பெயர்களை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பள்ளி மற்றும் விடுதிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குமாறும் பலரும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த…

ரூ.80 லட்சம் பண மோசடி புகார்: த.வெ.க எம்.எல்.ஏ விக்னேஷ் மீது போலீஸ் விசாரணை – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி முசிறி தொகுதி தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) எம்.எல்.ஏ விக்னேஷ் மீது ரூ.80 லட்சம் பண மோசடி புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

தமிழக ஆளுநரின் தாமதம் ஏன் விவாதத்திற்கு உள்ளாகிறது..?

இந்திய தண்டனை சட்ட்டங்களில் குறிப்பாக பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவில் வரும் வழக்குகளில் (இந்த வழக்குகள் சமாதானத்திற்கோ திரும்ப பெறுவதற்கோ உட்படாதவை ) அதனால் இந்த வழக்குகள் மற்ற வழக்குகளை போல பெரும்பாலும் முடித்துவைக்கப்படவோ அல்லது டிஸ்மிஸ் செய்யப்படவோ முடியாதவை ஆனால்…

சேவல் கொடி பறக்குது’: மருதமலை முருகனை தரிசித்து விஜய்க்கு வாழ்த்து சொன்ன வேல்முருகன்.

விஜய்யின் ராசியும் நட்சத்திரமும் என்னுடையதும் ஒன்றுதான். அவர் வெற்றி பெற்றதற்காகச் செவ்வாய்க்கிழமை முருகனிடம் வேண்டிக்கொண்டேன். முருகன் சோதிப்பாரே தவிர ஒருபோதும் கைவிடமாட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில்…

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்த விஜய்யின் வெற்றி: இலங்கை ஊடகங்களும் பாராட்டு மழை.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தலைவர் விஜய்க்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்…

இந்தியாவில் புகைப் பிடிக்க தடை விதிக்க வேண்டும்: மோடிக்கு அன்புமணி கடிதம்.

“இந்தியாவில் 26.70 கோடி பேர், அதாவது இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் வகை செய்யும்…

சட்ட விரோத சூதாட்டம்; எக்ஸிட் போல் பின்னணியில் ரூ 10,000 கோடி பிசினஸ்: கோலாகல ஸ்ரீனிவாஸ்.

பொதுவாக ஒரு மாநிலத்தில் எந்தத் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ, அந்தத் தொகுதிகள் ‘பெல்வெதர் தொகுதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 54 பெல்வெதர் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு…

ஒரு சில தொகுதிகளில் சிறப்பாக பணியாற்றவில்லை: வி.சி.க-வினர் மீது திருமா அதிருப்தி.

வி.சி.க போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை என்றும், தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை என்றும் கூறி திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ ஒன்றை…