இந்திய தண்டனை சட்ட்டங்களில் குறிப்பாக பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவில் வரும் வழக்குகளில் (இந்த வழக்குகள் சமாதானத்திற்கோ திரும்ப பெறுவதற்கோ உட்படாதவை ) அதனால் இந்த வழக்குகள் மற்ற வழக்குகளை போல பெரும்பாலும் முடித்துவைக்கப்படவோ அல்லது டிஸ்மிஸ் செய்யப்படவோ முடியாதவை ஆனால் இது போன்ற வழக்குகளில் உயர் நீதிமன்றம் நீதிபதியின் தனது விருப்புரிமை அதிகாரத்தால் ( discretionary powers ) வழக்கை ரத்து செய்யலாம்.
நீதிபதிகள் இது போன்ற பல சூழல்களில் உதாரணமாக ஜாமீன் வழங்குவதில் அல்லது தண்டனை தண்டனை வழங்குவதிலும் நீதிபதிகள் இந்த விருப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்துவார்கள். இது பல முறை விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது சில முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது சில முடிவுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் இந்த விருப்புரிமை அதிகாரதிற்கு எதிராக தீர்ப்புகளோ நடைமுறைகளோ இதுவரை வந்ததில்லை.
ஏனென்றால் இந்த விருப்புரிமை அதிகாரம் என்பது சட்டப்படியான சரியாந தீர்வுகளை ஏற்படுத்த மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. சட்டப்படியான தீர்வுகள் என்பதை தாண்டி சூழல் மற்றும் வழக்கின் தன்மைக்கேற்ற சட்ட வரையறையை தாண்டிய அனுமானங்கள் மூலம் முடிவுகள் எடுக்க உதவும் ” இது எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சிக்கிக்கொண்டு எடுக்கும் முடிவுகளை தவிர்க்கும் ( one size fit for all approach)
இந்த விருப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்துவதன் நோக்கம் தனிப்பட்ட சுயநல நோக்கம் நோக்கமாக இருக்க கூடாது என்பது மட்டுமே நிபந்தனை.
இந்த விருப்புரிமை அதிகாரம் அல்லது சீர்தூக்கி பார்க்கும் ( discretionary powers ) அதிகாரம் இந்திய ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு முறையே அரசியலமைப்பு சட்டம் பிரிவு 75 மற்றும் 164(1) இல் வழங்கப்பட்டுள்ளது
பல நீதிமன்ற உத்தரவுகளில் ஆளுநரின் தாமதம் அல்லது பெரும்பான்மை இல்லாதவரை ஆட்சிஅளிக்க கோரும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் இவர்களுக்கு பல வழிமுறைகளை நியமங்களை விதித்திருரியாது ஆனால் ஆளுநர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வழக்கிலும் ஆளுநரின் விருப்பதிகாரம் அல்லது சீர்தூயோகி பார்க்கும் அதிகாரத்தை விமரிசனம் செய்யவோ அது தேவையற்றது என்றோ கூறவில்லை . இந்த விருபாதிகாரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு “தேவையான தீமையாக “ ( nessesary evil ) கருதப்படுகிறது. இது நியமனான வழியில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்
உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு தொங்கு சட்டசபை அமைகிற சூழலில் தற்போது தமிழக ஆளுநர் அதிக இடங்களை பெற்ற தேர்தலுக்கு முந்தய கூட்டணி கட்சிகளை அழைக்கலாம், இல்லையென்றால் அதிக எண்ணிக்கைகளை பெற்ற தனி பெரும்பான்மை உள்ள கட்சி பிறகு அதிக எண்ணிக்கை பெற்ற தேர்தலுக்கு பிறகான கூட்டணி காட்சிகளை அழைக்கலாம். இவர்களை அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்து பிறகு சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க செய்யலாம்.
ஆனால் எந்த ஒரு சூழலிலும் ஆட்சி அமைக்க கோரும் பெரும்பான்மை உள்ள கட்சியை தற்போதைய சூழலில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தை புறக்கணிக்க கூடாது. இதற்கான அனுமதி அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. ஆனால் தமிழக ஆளுநர் தாமதிக்கிறார்…
இங்கு ஆளுநரின் விருப்புரிமை அதிகாரம் ( discretionary powers ) செயல்படுகிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆட்சி அமைக்க கோரும் கட்சி நிஜமாகவே பெரும்பான்மை பெற்றுள்ளதா அல்லது சட்டசபையில் பெரும்பான்மைபலத்தை நிரூபிக்கும் அளவிற்கு வாய்ப்புள்ள கட்சியா என்பதை தீர்மானிக்க ஆதாரங்களை வைத்து முடிவெடுக்கும் “விருப்புரிமை அதிகாரம்” ஆளுநருக்கு உள்ளது. ஆனால் அதற்காக நாட்கணக்காக காலம் தள்ளி தாமதிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது.
இந்த விருப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்தி பொறுப்பற்ற முறையில் காலம் கடத்துவதே ஆளுநரின் நடவடிக்கையை விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த அடிப்படையில் பார்த்தல் ஆளுநர் தனது விருப்புரிமையின் அடிப்படையில் காலம் தாழ்த்துகிறார். அது சட்ட விரோதமானது அல்ல. ஆனால் ஆளுநரின் பொறுப்பிற்கும் கடமைக்கும் விரோதமானது. இந்த தாமதம் ஸ்திரமற்ற சூழலுக்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுத்தால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால் நீதிமன்றம் மீண்டும் ஒரு முக்கியத்துவமான தீர்ப்பை வழங்கலாம்

