தோனியுடன் இந்திய அணியில் மட்டுமல்லாது, ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளில் சக வீரராக உடன் பயணித்த அனுபவத்தை கொண்டவர் அஜிங்க்யா ரஹானே.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வந்தவர் அஜிங்க்யா ரஹானே. இவர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் 12 சதம், 26 அரைசதங்களுடன் 5077 ரன்களையும், 90 ஒருநாள் போட்டிகளில் 3 சதம், 24 அரைசதங்களுடன் 2962 ரன்களையும், 20 டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் விளாசி 375 ரன்களையும் எடுத்துள்ளார். ஜூலை 2023-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே அவரது கடைசி ஆட்டமாக அமைந்தது.
தோனி ஒருபோதும் சமரசம் செய்யாத அந்த விதி
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாத ஒரு விதியை அஜிங்க்யா ரஹானே வெளிப்படுத்தியுள்ளார். தோனி தனது வியூகத் திறனுக்காக மட்டுமல்லாமல், சக வீரர்களை அவர் கவனித்துக்கொள்ளும் விதத்திற்காகவும் நீண்ட காலமாகப் பாராட்டப்பட்டு வருகிறார். தனது விளையாட்டுப் பயணம் முழுவதும், இளம் வீரர்களை இயல்பாக உணர வைப்பதிலும், களத்திலும் வெளியிலும் அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குவதிலும் அவர் நற்பெயரைப் பெற்றிருந்தார்.
தோனியுடன் இந்திய அணியில் மட்டுமல்லாது, ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளில் சக வீரராக உடன் பயணித்த அனுபவத்தை கொண்டவர் அஜிங்க்யா ரஹானே. இந்நிலையில், போட்டிக்கான சுற்றுப்பயணங்களின் போது தோனி கடைப்பிடித்த அந்த விதி குறித்து ரஹானே பகிர்ந்து இருக்கிறார்.
