தேர்தல் தோல்விகளால் தி.மு.க ஒருபோதும் துவண்டுவிடாது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், சுவரில் அடித்த பந்து போல திமுக முன்பை விட அதிக வேகத்துடன் (Bounce back) மீண்டும் களத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், கட்சியில் மிகப்பெரிய அளவிலான அதிரடி மாற்றங்களைச் செய்ய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருகிறார். இதுகுறித்து அவர் தி.மு.க தொண்டர்களுக்கு விரிவான மற்றும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் தி.மு.க.தான் திகழ்கிறது என்றும், கட்சியின் வலிமையைப் பெருக்கும் வகையில் அதன் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்வதற்கான ஆய்வுகளைத் தான் மேற்கொண்டு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.