கோவையில் ரூ8000 கூப்பன் விநியோகம்; தி.மு.க. நிர்வாகியை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த என்.டி.ஏ நிர்வாகிகள்.

தென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பொருப்பாளர் வாக்காளர்களுக்கு கள்ளத்தனமாக 8 ஆயிரம் ரூபாய்கான டோக்கன்களை வினியோகித்து மோசடியில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு
Election

கோவையில் ரூ8000 கூப்பன் விநியோகம்; தி.மு.க. நிர்வாகியை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த என்.டி.ஏ நிர்வாகிகள்

தென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பொருப்பாளர் வாக்காளர்களுக்கு கள்ளத்தனமாக 8 ஆயிரம் ரூபாய்கான டோக்கன்களை வினியோகித்து மோசடியில் ஈடுபட்டனர்.

Coimbatore

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் துடியலூரில் ‘8,000 ரூபாய் டோக்கன்’ விநியோகம் செய்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மோசடி கும்பல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரம் நிலையில், தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றால், மகளிருக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ரூ8000 கூப்பன் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் போலியாக ரூ8000 கூப்பன் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே, கோவையில் பல்வேறு இடங்களில் தி.மு.கவினர் கள்ளத்தனமாக 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் வழங்குவதை தேசிய ஜனநாயக கூட்டணி கட்டி நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி தென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பொருப்பாளர்  வாக்காளர்களுக்கு கள்ளத்தனமாக 8 ஆயிரம் ரூபாய்கான டோக்கன்களை வினியோகித்து மோசடியில் ஈடுபட்டனர். 

தேர்தல் ஆணையம் போலி டோக்கன்களை மக்களிடம் வினியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பிறகும், இவ்வாறு கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, தென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூப்பன் விநியோகம் செய்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

கோவை வடக்கு மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் தொகுதி துடியலூர் பகுதியில் போலி டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றுவதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அந்த கும்பலை பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடனடியாக இந்த மோசடி கும்பல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.