தனசேகரன் கூக்குறலிடவே அவரது வாயில் துணியை வைத்து அடைத்து முகம் வயிறு இடுப்பு பகுதி என சரமாரியாக தாக்கியப்படியே கோவை பாலக்காடு புறவழிச் சாலையில் காரை இயக்கியுள்ளனர். 

கோவையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி அணி மாவட்ட தலைவரும் தொழிலதிபருமான காட்டூர் தனசேகரன் என்பவர் காரில் கடத்தப்பட்டு கடும் தாக்குதலுக்குள்ளாக்கி காட்டுப் பகுதியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.