தனியார் மயமாகும் முதல்வர் படைப்பகம்? ஆணையம் விளக்கம்

முதல்வர் படைப்பகம் தனியார் மயமாக்கப்படவில்லை. படைப்பகங்களுக்கு பாதுகாவலர், தூய்மைப் பணியாளர் பணிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 24 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 15 பயன்பாட்டில் உள்ளன. எஞ்சிய 9 முதல்வர் படைப்பகங்களும் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கமளித்துள்ளார்.

விஜய் வருகையை முன்னிட்டு கரூரில் பரபரப்பு; நிகழ்ச்சி தளத்தை பார்வையிட்ட நிர்வாகிகள்

வரும் 10-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூர் வருகை தரவுள்ள நிலையில், அங்கு நடைபெறவுள்ள அரசு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தை கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், நிகழ்ச்சிக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.