அன்பில் மகேஷ் பொய்யாமொழியைப் பொறுத்தவரை தமிழகத்தினுடைய பகுதிநேர கல்வி அமைச்சர் பார்ட் டைம் எஜுகேஷன் மினிஸ்டர் பார்ட் டைம் தான் ஃபுல் டைம் இல்லைங்க.

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் ஆனால் பறக்கும் வெயிலையும் கடந்து தக தக வென தகிக்கின்றது. அந்த வகையில், திருவெறும்பூர் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ப.குமார் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திலே ஒரு பெரிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது. நம்முடைய அன்பு சொந்தங்கள் எல்லாம் நிச்சயமாக தமிழகத்திலே திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி வீட்டுக்கு செல்ல வேண்டும். ஒரு புதிய ஆட்சி நம்முடைய என்டிஏ வரணும். சகோதரர் எடப்பாடி பழனிசாமி மே 4ம் தேதிக்கு பிறகு தமிழகத்தினுடைய முதலமைச்சராக வரவேண்டும் என்று எல்லா மக்களுமே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஐயா டெல்டாவிலிருந்து தென் தமிழகத்திலிருந்து கோயம்புத்தூரிலிருந்து இப்ப சென்னை வரை எல்லோருக்கும் திமுக வேண்டாம் என்.டி.ஏ வேண்டும். ஐயா இன்னைக்கு நாம திருவெறும்பூர் தொகுதியில மிக முக்கியமாக நம்முடைய திருச்சி மாநகரத்தினுடைய தொகுதியில் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 11 ஆம் தேதி இங்கு வந்து வாக்கு சேகரித்தார். இங்க வந்து என்ன பேசிட்டு போனார்னா நான் ஜெயிப்பது முக்கியமல்ல அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஜெயிக்க வைக்கணும்.