தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றில் முதல் முறையாக 215 பேருக்கு நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கு தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் நன்றியும் பாராட்டும் தெரிவித்து முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் அண்மையில் நடைபெற்ற பணியிட மாறுதல் என்பது வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் நடத்தியதற்காக பாராட்டு தெரிவித்துள்ளனர் அதோடு தமிழ்நாடு அரசுக்கு சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி உள்ளனர்
புதிய அரசு பதவி ஏற்ற குறுகிய காலத்திலேயே தற்போது 215 நபர்களுக்கு பணியிட மாறுதல் வெளிப்படை தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல இனி வரும் காலங்களில் பணியிட மாறுதல் பெறாமல் இருப்பவர்களுக்கும் ஒரு நியாயமான பணியிட மாறுதல் வழங்க வேண்டும், அவர்களுக்கு இனி வரும் காலங்களில் கலந்தாய்வு மூலமாக பணியிட மாறுதல் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் சார்பதிவாளர் சங்கத்தினர் முன்வைத்திருக்கிறார்கள்.
