தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் பல கட்டங்களாக நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டைப் பன்னாட்டு அளவில் நடத்தத் தமிழக அரசு ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகளுக்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் ஆலோசனைகள் நடத்த அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில், சுமார் 15 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை அனைத்துலக அளவில் பல கட்டங்களாக நடத்துவதற்குத் தமிழக அரசு அதிரடித் திட்டங்களை வகுத்து, முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ‘உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு’ நடைபெற்றது. அதன்பிறகு தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த உலகளாவிய தமிழ் மாநாட்டை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளுக்குத் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் பச்சைக்கொடி காட்டி ஒப்புதல் அளித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
