தமிழக அரசு 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில், சிங்கப் பெண் சிறப்பு படை ஐ.ஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு இன்று 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.