‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வெளியிட்ட ‘ஆடி மாத பாவங்கள்’ வீடியோவில் இருந்த குறிப்பிட்ட காட்சி இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் யூடியூப் உலகில் கோபியும், சுதாகரும் மிகவும் ஃபேமஸ். அவர்கள் ‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். தற்போதைய சூழலுக்கு ஏற்ப கண்டெண்டுகளை போட்டு பல மில்லியன் வியூஸ்களை அள்ளி வருகின்றனர். இந்த பேமஸே கோபி, சுதாகர் மற்றும் அவருடன் சேர்ந்து நடிக்கு டிராவிட்டை திரைத்துறையில் பிரகாசிக்க வைத்துள்ளது. இவர்கள் தற்போது சில படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வெளியிட்ட ‘ஆடி மாத பாவங்கள்’ வீடியோவில் இருந்த குறிப்பிட்ட காட்சி இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டபோது, அவருடைய மகன் சஞ்சய் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். அவரை கேலி செய்யும் வகையில், இந்த ‘ஆடி மாத பாவங்கள்’ வீடியோவில் கண்டெண்ட் இருப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன.