தனக்கே தெரியாமல் அணியின் ஜெர்சி கலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு மூத்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாகவும் ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கி தெரிவித்துள்ளார். 

2026 ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி புதிய காவி நிற ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த நீல நிற ஜெர்சிக்குப் பதிலாக இந்த மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. வீரர்களுடன் கலந்தாலோசிக்காமலேயே இந்த ஜெர்சி மாற்றம் செய்யப்பட்டதாகவும், இந்திய அணியின் பல வீரர்களுக்குப் புதிய வடிவமைப்பு இந்த வாரத் தொடக்கத்தில் காண்பிக்கப்பட்ட பின்னரே அதுபற்றித் தெரியவந்ததாகவும் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நேற்று செய்தி வெளியிட்டடது.