ஒரே நேரத்தில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் விஜய், சினிமாவில் இருந்து வெளியேவிட்டாலும், அவரது மகன் இயக்குனராக சினிமாவில் என்ட்ரி ஆகியுள்ள நிலையில், தனது அப்பா விஜய் குறித்து அவர் பேசியுள்ள வீடியோ பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று பெற்றியை பெற்று முதல்வராக அமர்ந்துள்ளார். அவரது கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. கட்சி தொடங்கும்போதே இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் அறிவித்துவிட்டார்.
விஜயின் கடைசி படமான ஜன நாயகன் 2026-ம் ஆண்டு வெளியாகியுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது, சந்தீப் கிஷன் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது,
இந்த படம் வரும் ஜூலை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜயின் ‘ஜனநாயகன்’ வெளியானதால் ‘சிக்மா’ ரிலீஸ் தள்ளிப்போனது. இதனால் ஆகஸ்ட் மாதம் ‘சிக்மா’ படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இனிடையே படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள இயக்குனர் ஜோசன் சஞ்சய், தனது தந்தையும், முதல்வருமான விஜய் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.
