த்ரிஷா தற்போது, அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ‘தரமான தூக்கம்’ குறித்த ஒரு உரையாடலைத் தொடங்கியுள்ளது.

சமீப காலமாக நடிகை த்ரிஷா வெளியிட்டு வரும் பதிவுகள் அனைத்தும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அவர் ஒருமணி நேரம் தூக்கத்தை தவறவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான திரிஷா, அடுத்தடுத்த ஆண்டுகளில் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அவர் நடித்துள்ளார். தனது திரைப்பயணத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் திரையுலகில் வெற்றிகரமாகப் பயணித்து வரும் த்ரிஷா பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து, தென்னிந்திய சினிமாவின் ஒரு முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள கருப்பு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாகவே, பொது நிகழ்ச்சிகளில் அவரது வருகை மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் எனப் பல காரணங்களால் அவர் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
