தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில் தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

72-வது தேசிய திரைப்பட விருதுகள், டெல்லியில் நேற்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டது. 2024 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31, 2024 வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மூலம் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. திரைப்பட இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு இந்த விருது தேர்வு பட்டியலை தயாரித்துள்ளது.