சிவக்குமார், ஜெயசித்ரா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைக்க, கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் முத்துலிங்கம் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

கன்னட கவிஞர் ஒருவர் ஒரு டியூனுக்கு பாடல் எழுத 7 நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அதே டியூனுக்கு தமிழில் கவியரசர் கண்ணதாசன் சில நிமிடங்களில் பாடல்கள் எழுதி அசத்தியுள்ளார். அந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் ஒரு பாடலாக உள்ளது