தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “வாக்குப்பதிவு நாளில் தி.மு.க-வினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவரது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேடி நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “வாக்குப்பதிவு நாளில் தி.மு.க-வினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவரது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், வாக்குச்சாவடி முகவர்கள் கண்ணியத்துடனும் கவனத்துடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
