
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் மாநில அளவில் கவனம் பெற்ற தொகுதி கோவை தெற்கு. மொத்தம் 19 மாநகராட்சி வார்டகளை உள்ளடக்கிய இந்த தொகுதி புளியகுளம், ராமநாதபுரம், டவுன்ஹால், செட்டி வீதி, உக்கடம் பகுதிகளை உள்ளடக்கியது.
கோவை மாநகரில் உள்ள மற்ற தொகுதிகளோடு ஒப்பிடும்போது கோவை தெற்கு பல மொழி பேசுகிற மக்களை ஒரு சிறிய நிலப்பரப்பில் உள்ளடக்கிகிய பகுதியாகும். அருகருகே வாழும் பல மத, மொழி மற்றும் பிரிவுகளை சேர்ந்த மக்களை கொண்ட தொகுதி கோவை தெற்கு.
உக்கடம் பகுதி அதிக அளவு பாலக்காடு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்களை கொண்ட பகுதி, டவுன் ஹால் பகுதி என்பது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வந்த பல இன மக்களால் நடத்தப்படும் வணிக வளாகங்கள், வியாபார நிறுவனங்கள் வங்கிகள் போன்றவை இயங்குகின்றன.
செட்டி வீதி என்கிற டவுன் காலை ஒட்டி செல்வபுரத்திற்கு முன்பாக இருக்கும் பகுதி ஆந்திரா பகுதியில் இருந்து புலம் பெயர்ந்தவணிகர்கள் மற்றும் விஸ்வகர்மாக்கள் நிறைந்த பகுதி டவுன்ஹால் வணிக வளாகங்கள் வியாபார நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்றால் செட்டி வீதி என்பது நகை பட்டறை தொழில் நிறைந்த பகுதி.
கோவை கணபதி பகுதியில் ஒரு காலத்தில் தொழில் முனைவோர் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு லேத் தொழிற்சாலை இருக்கும் அதே போல் செட்டி வீதியில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நகை பட்டறை இருக்கும் இடமாகும்.
தொகுப்பு குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இந்த பகுதி தற்போது வங்காள நகை பணியாளர்களின் குடியேற்றம் அதிகரித்துள்ளது.
உக்கடம் தெற்கு பகுதியில் கன்னட மக்கள் அதிகம் வாழும் பகுதி இவர்கள் இந்த பகுதியை சுற்றி சிறு சிறு உணவு கடைகள், சந்தை வியாபாரங்கள் செய்து வருகிறார்கள் .
1972 இல் இருந்தே இந்த பகுதி அதிமுக அபிமானிகள் நிறைந்த பகுதியாகும். தொகுதி சீரமைப்பு நடந்தபிறகு நடந்த மூன்று முறை சட்டமன்ற தேர்தல்களில் அதி மு க வெற்றி பெற்றுள்ளது ஒரு முறை பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளாது.
கோவை குண்டுவெடிப்பு மற்றும் அதையொட்டிய கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் தீவிர வலதுசாரி இயக்கங்களில் ஆதிக்கம் உள்ள பகுதி.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் கடுமையான போட்டிக்கு பிறகு வானதி சீனிவாசன் அவர்களை வெற்றி பெற வைத்து கவனத்தை ஈர்த்த தொகுதி. அதுமட்டுமல்லாமல் அதை அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளில் பெருபான்மையான வாக்குகளை அளித்தது தெற்கு தொகுதி.
அதிமுக மற்றும் ப ஜ க இரு கட்சியினரும் அதிகம் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைக்கும் தோகுதியாக இருக்கிறது கோவை தெற்கு.
ஆனால் தற்போது தெற்கு தொகுதியை பொறுத்தவரை இந்த சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதைக் கான முடிகிறது
இதை பற்றி கருத்து தெரிவித்த ப ஜெ க தொண்டர் ஒருவர் “ சென்ற முறை பாராளமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை அவர்களுக்காக கடுமையாக பணி செய்தது அதிக வாக்குகளையும் பெற்று கொடுத்தது. இந்த தேர்தலிலும் ப ஜ க தனித்து போட்டியிட்டிருந்தால் கோவை தெற்கு அதிமுக வின் கோட்டை என்கிற பிம்பத்தை உடைத்திருக்கலாம்
ஆனால் இப்பொது தொகுதி மீண்டும் அதிமுக கைகளுக்கு சென்று விட்டது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டி பிடித்திருக்க வேண்டிய ப ஜ க தற்போது மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டிய சூழல் வந்துவிட்டதாக “ . கூறினார்
அண்ணாமலை அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் காலம் கண்டிருக்க வேண்டும் என்பது சென்ற சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பனி செய்த பி ஜ க வினரின் விருப்பமாக இருக்கிறது.
தெற்கு தொகுதி ப ஜ க நிர்வாகிகள் சென்ற தேர்தலில் அதி மு க வுடன் உருவான மோதல் போக்கை சரி செய்ய முடியாமல் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் போட்டியிடும் கோவை வடக்கில் சென்று தேர்தல் பணி செய்கிறார்கள்.
தற்போது செந்தில் பாலாஜி போட்டியிடுவதால் அதிமுக விருக்கு இது சவாலான தேர்தலாக இருப்பது மட்டுமல்லாமல் மீண்டும் மாநில கவனம் பெற தயாராகிறது கோவை தெற்கு.
அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இந்த தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது மட்டுமின்றி தொகுதி மக்களிடையே வரவேற்பு உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
