விருது மேடையில் அஜித் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துத் தனது குழுவினருடன் வெற்றியைக் கொண்டாடினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித் குமார், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு தனது அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் கார் ரேஸ் போட்டிகளில் கலச்துகொண்டு வரும் நிலையில், தற்போது அவர் தனது கார் ரேஸ் குழுவுடுன் இந்திய தேசிய கொடியை உயர்த்தி பிடித்துள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெல்ஜியத்தில் உள்ள புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் (Circuit de Spa-Francorchamps) ஓடுதளத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில், நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது பந்தய குழுவினர் மீண்டும் ஒருமுறை பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர். 24H சீரிஸ் (24H Series) தொடரில் அஜித் குழு இரண்டாம் இடத்தைப் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது. விருது மேடையில் அஜித் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துத் தனது குழுவினருடன் வெற்றியைக் கொண்டாடினார்.
அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் குமார் ரேசிங் டீமின் இந்த மகுடம் சூடும் தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவிற்கு, “பெருமைக்குரிய மேடையில்… சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் ஓடுதளத்தில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர். 24H சீரிஸில் P2 (இரண்டாம் இடம்) வெற்றி – ஆர்வம் பெருமிதமாக மாறும் தருணம், உலக அரங்கில் இந்தியக் கொடி உயர்ந்து பறக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
