இன்று இசை உலகின் ஜாம்பவனாக இருக்கும் இளையராஜாவின் முதல் படத்தில் ஏற்பட்ட சிக்கல் குறித்து பார்க்கலாம்.

70-களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. ‘அன்னக்கிளி’ படம் தொடங்கி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ஓடாத கதையையும் தனது இசையால் ஒட வைப்பார், இளையராஜா இசை இருந்தாலும் போதும் படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்றார்போல், தனது பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு.
தற்போது 80 வயதை கடந்தவராக இருந்தாலும், இன்றைக்கும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக வலம் வரும் இளையாஜா, பாடல் காப்புரிமை விவகாரத்தில் கண்டிப்புடன் இருந்து வருகிறார். தனது அனுமதி இல்லால் தனது பாடல்கள் மற்றும் இசையை, படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துவிடுவார். இதன் காரணமாக அவர் மீது கடுமையான விமர்சனங்களும் இருந்து வருகிறது. அதே சமயம், இளையராஜாவின் புகழ் குறித்தும் பலர் பேசி வருகின்றனர்
