படம் மட்டும் இல்லாமல் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆர்,சுந்தர்ராஜன் இயக்கிய இந்த படத்தில் ராதா நாயகியாக நடித்திருந்தார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர், தனது ஆட்சி காலத்தில் திரைத்துறையில் நடைபெற்ற பல்வேறு விழாக்களில் பங்கேற்றிருந்தார். அதேபோல் முதல்வராக இருந்தபோது திரைத்துறை பிரபலங்களுடனும் பயணித்துள்ளார். அப்போது கங்கை அமரன் கேப்டன் படத்திற்காக எழுதிய ஒரு பாடலை எம்.ஜி.ஆரிடம் பாடி காட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த கேப்டன் விஜயகாந்த், அரசியலிலும் குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்து அசத்தியவர். பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த விஜயகாந்த் 1987-ம் ஆண்டு அம்மன் கோயில் கிழக்காலே என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் மட்டும் இல்லாமல் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆர்,சுந்தர்ராஜன் இயக்கிய இந்த படத்தில் ராதா நாயகியாக நடித்திருந்தார். 

இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு கங்கை அமரன் பாடல்கள் எழுதியிருந்தார், இசைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளித்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, விஜயகாந்த் விரக்தியில், சாராயக்கடையில் பாடுவது போன்று வரும் மூனு முடிச்சாலே என்று தொடங்கும் இந்த பாடல் இன்றைக்கும் காமெடி மற்றும் சோகம் என இரண்டுக்கும்மே ஜாலியாக கேட்கும் பாடலாக அமைந்துள்ளது.