த.வெ.க பற்றி பதிவிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது-விடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) மாநில துணைத்தலைவராக அப்துல் ஹமீது இருக்கிறார். இவர் தனது முகநூல் பதிவில், “விஜய்-பெயரல்ல பேசும்பொருள், 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் புதுமையில் விஜய் ஒன்றுமில்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. விஜய் அவர்களின் ஒற்றை வார்த்தைக்காக பெரும்தொகை செலவு செய்து வருகை தந்த வெளிநாடுவாழ் வாக்காளர்கள் நிகழ்வு என்பது இதுவரை தமிழகம் காணாத செயல் என்பது மறுக்க முடியாத உண்மை.
த.வெ.க மற்றும் விஜய் மீது வைக்கப்படும் தேவையான விமர்சனங்களில் அவர்கள் கவனம் எடுக்கவேண்டியது தமிழக அரசியல் நாகரிகத்தை
பண்படுத்தும். வலுப்படுத்தும். அவர்களையும் அதுபோல விஜய் மற்றும் அவரின் ஆதரவாளர்களை போறபோக்கெல்லாம் வசைபாடுவது சரியல்ல. ஏனென்றால் தமிழகத்தை ஆட்சிபுரிந்த ஜாம்பவான்கள் பலரும் திரை கலைத்துறையினரே. விஜய் மட்டும் என்ன விதிவிலக்கா?
தற்குறிகள், விசிலடிச்சான் என்ற சொல்லாடல் ஒன்றும் புதுமை அல்ல.1970 களில் தனியே அரசியல் களம் கண்ட எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு அப்போதே இந்த பட்டங்கள் சூட்டி வசைபாடினர் என பெருசுகள் சொல்கின்றனர். தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டி ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களை விஜய் முறைப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசியல் களம், அவை ஏற்படுத்தும் முடிவுகளை எதிர்கொள்ளும் மனவலிமை மற்றும் நெறிமுறைகளை செயல்படுத்தி தொடர்ந்து களம் நின்றால் விஜய் தொடங்கிய அரசியல் ஆரோக்கியமே. தேர்தல் முடிவு எதுவாகினும் விஜய் அவர்களால் ஈர்க்கப்பட்டவர்களை அவர் தக்கவைப்பாரா? விஜய் அரசியலை காத்திருந்து பார்ப்பவர்களில் நானும் ஒருவனாய். (பொதுவான அரசியல் பதிவுதான் கண்,காது,மூக்கு…வைத்துவிட வேண்டாம்)” என்று கூறியிருந்தார்.

இந்தப் பதிவை அப்துல் ஹமீது நீக்கிவிட்டு நிலையில், அவரின் பதிவை முகநூலில் பகிர்ந்துள்ள தி.மு.க ஆதரவாளரான அபு ரய்யான் என்பவர், அப்துல் ஹமீது நீக்கிய பதிவை பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், “எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கும் அப்துல் ஹமீது அவர்களே. இத்தனை நாள் பெரும் போராட்டத்திற்கு பிறகு பல்வேறு முயற்ச்சிகளுக்கு பிறகு தற்போது தான் எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழக அரசியலில் கால் பதிக்கும் ஒரு நல்வாய்ப்பு உருவாகியுள்ளது.
முகமது முபாரக் என்ற நெல்லை முபாரக் பாய் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்? அவரது வெற்றி கனிந்து வரும் நேரத்தில் இப்படி கொதிக்கும் சுடும் நீரை ஊற்ற வேண்டிய அவசியம் தான் என்ன? தமிழக அரசியலை எப்படியெல்லாம் மடை மாற்றலாம், தமிழகத்தில் யாரை வைத்து தாங்கள் காலை ஊன்றலாம் என்றெல்லாம் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் அமைப்புகள் செய்யும் சதிகளை அறியாமலே அவர்களால் களமிறங்கப் பட்டுள்ள கபட வேடதாரி ஒழுக்கம் கெட்ட போதை அடிமை நடிகன் விஜய் பின்னாலே கொடிப்பிடிக்கும் சிறுபான்மை சமூகத்தை சீர்படுத்தி தெளிவுபடுத்த வேண்டிய கடமையுள்ள தங்களை போன்றவர்களே இப்படி தற்குறித்தனமாக பதிவிடுவது உள்ளப்படியே பேரதிர்ச்சியாக உள்ளது.
எஸ்.டி.பி.ஐ என்ற சமூக நலனில் அக்கறை கொண்ட பல்லாயிரம் இளைஞர்களை கொண்ட இயக்கத்தில் வகிக்கும் பொறுப்பிற்கு இனிமேலும் எள்ளின் முணை அளவும் தாங்கள் தகுதியானவரல்ல. ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இனைந்து கொள்ளவும். இஸ்லாமிய சமுதாயத்தில் தான் எத்தனை கோடறி காம்புகள், மானக்கேடு, வெட்கக்கேடு.” என்று கோரியுள்ளார்.
தி.மு.க ஆதரவாளரான அபு ரய்யானின் இந்தப் பதிவுக்கு அப்துல் ஹமீது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “நேற்று நான் பதிவிட்ட முகநூல் பதிவு தலைமை கேட்டதற்க்கு இணங்க நீக்கிவிட்டேன். அபு ரய்யான் தனது பக்கத்தில் எனது பதிவு பற்றி (கூட்டணி மாறுபாடு மற்றும் விஜய் ஆதரவு) என்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். அவர் நோக்கம் சிண்டு முடிய (எனது பதிவில் கூட்டணி அதர்மத்துக்கு சரியான வார்த்தையை முன்வைக்கட்டும். ஷௌகத் ஹுசைன் உட்பட) விவாதிப்போம்.
கூட்டணிசெயல்பாட்டையும், சாதாரண கருத்தையும் பிரித்து பார்க்க தெரியாத அபு ரய்யான் நேரடியாக எனது பின்னூட்ட பதிவுகளுக்கு பதில் தரவேண்டும். இல்லையென்றால் சிண்டுமுடிந்து கூட்டணி நிலைப்பாட்டை கேலியாக்குவது நீங்கள்தான் .இவர்போன்ற குழப்பவாதிகளை அடையாளம் கண்டு நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும். இவரைப்போன்று பல தற்குறிகள் புரிந்து கொள்வார்கள்.” தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், த.வெ.க பற்றி பதிவிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது-விடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “எஸ்.டி.பி.ஐ க கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது அவர்கள், நேற்று முன்தினம் அவரது முகநூல் பக்கத்தில் தவெக குறித்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் சொல்லப்பட்ட கருத்துகள் அனைத்தும் அவரது சொந்த கருத்தாகும். அது கட்சியின் நிலைப்பாடல்ல. எனினும் இதுகுறித்து திரு. அப்துல் ஹமீது அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியிருக்கிறார்.