தமிழகத்தில் 2026 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரை 33 பிரிவுகளின் கீழ் டிஜிட்டல் முறையில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

நடவடிக்கைகள் வரும் மே மாதம் முதல் தொடங்கப்பட உள்ளன. சட்டமன்றத் தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த கணக்கெடுப்புப் பணிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் புத்துயிர் பெறுகின்றன. இது தொடர்பாக 2026 பிப்ரவரி மாதமே மாவட்ட ஆட்சியர்களுடன் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது நேரடிப் பயிற்சிகளுக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.