வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்காக த.வெ.க ஆதரவாளர்கள் காத்திருக்கும் இந்த சூழலில், விஜய் புகைப்படம் இருக்கும் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) போட்டியிட்டது. 233 தொகுதிகளில் விசில் சின்னத்திலும், எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தும் இருந்தது.