சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு (96) கோவையில் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் இலக்கிய ஆளுமைகள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.