சிங்காரச் சென்னை என்ற பெயரில் சென்னையில் புறம்போக்கு நிலங்களில் வாழும் லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களை நகரத்தை விட்டு வெளியேற்றும் தி.மு.க அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.

“சிங்காரச் சென்னை” என்ற பெயரில் சென்னையில் பல தலைமுறைகளாக வசிந்து வரும் ஏழை, எளிய மக்களை அப்புறப்படுத்திய முந்தைய தி.மு.க அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) வன்மையாக எதிர்ப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
சென்னை மாநகரம் முழுவதும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைப் போன்ற உழைக்கும் மக்களை, நகரத்தை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அப்புறப்படுத்தும் காரியங்களை நடப்பு திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் செய்தது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது. சென்னை என்பது குறிப்பிட்ட சிலருக்கானது அல்ல; அது எல்லா சமூகத்தினுடைய மக்களும் இணைந்து வாழக்கூடிய பொதுவான நகரமாகும்.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான பிரச்னையில், நீதிமன்ற உத்தரவால் வரக்கூடிய விளைவுகளைச் சந்திக்கத் தயார் என்று துணிச்சலான முடிவை எடுக்க தமிழ்நாடு அரசாங்கத்தால் முடிகிறது. அதேபோன்றதொரு துணிச்சலான நிலையை, திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பிரச்னையிலும் அரசு ஏன் எடுக்கக் கூடாது?
