நாட்டின் 80-வது சுதந்திர தின விழா மற்றும் அணிவகுப்பு ஒத்திகைகளை முன்னிட்டு சென்னையில் ஆகஸ்ட் 7, 11, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகக் காவல் துறை அறிவித்துள்ளது. காமராஜர் மற்றும் ராஜாஜி சாலைகளில் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் மற்றும் அதன் அணிவகுப்பு ஒத்திகைகளை முன்னிட்டு, சென்னையில் ஆகஸ்ட் 7, 11, 13 மற்றும் 15 ஆகிய 4 தேதிகளில் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் விழா முடியும் வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும் எனச் சென்னை பெருநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் அதற்கான அணிவகுப்பு ஒத்திகைகள் நடைபெறவுள்ள ஆகஸ்ட் 7, 11, மற்றும் 13 ஆகிய நான்கு தேதிகளிலும் சென்னையில் காலை 6 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.