ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மீண்டும் திறக்கப்படுவது உலக பொருளாதாரத்திற்கு முக்கியமான திருப்புமுனையாக அமையலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தின் காரணமாக கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கும், கடல் போக்குவரத்து தடைகளுக்கும் உள்ளாகி இருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு நிலைமை மெதுவாக சீராகும் பாதையில் செல்கிறது.