நட்பாகப் பேசிவிட்டு, அவர் இல்லாதபோது பழித்துப் பேசிப் பொய்மையாக உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாமல் இறந்துவிடுவது நல்லது.

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், சமூகவலைதளங்களில் தன்னைப்பற்றி பதிவிடப்படும் தவறான கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. போராட்டத்தில், பேசியபோது முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். குறிப்பாக, கூட்டத்தில் த்ரிஷா த்ரிஷா என்று கத்தும்போது அவர் சொன்ன வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது தமிழ்நாடு முழுவதும் த.வெ.க.வினர் புகார் அளித்த நிலையில், அவருக்கு எதிராக த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை த.வெ.க மகளிர் அணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உதயநிதி, கைது செய்யப்படடதற்கு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இது அரசியல் பழிவாங்கல் என்று கூறி வருகின்றனர். 

இந்நழலையில், உதயநிதி கைது நடவடிக்கை குறித்து பேசி வரும் சில யூடியூப் சேனல்கள், தன்னையும் உதயநிதியையும் சம்பந்தப்படுத்தி பேசிய கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த தகவலை மறுத்து பேசியிருந்தார், குறிப்பாக, துபாயில் தனக்கு வீடு வாங்கித் தரப்பட்டதாகப் பரப்பப்பட்ட போலிச் செய்திகளை மறுத்துப் பேசியிருந்த நிவேதா பெத்துராஜ், தற்போது மீண்டும் இத்தகைய செய்திகள் உலா வருவது குறித்துத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருக்குறள் ஒன்றை பதிவிட்டுள்ளார். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். – திருக்குறள் 183 என்று பதிவிட்டுள்ளார். இந்த குறளுக்கு, முன்னிலையில் நட்பாகப் பேசிவிட்டு, அவர் இல்லாதபோது பழித்துப் பேசிப் பொய்மையாக உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாமல் இறந்துவிடுவது நல்லது. இது திருக்குறள் 183 அதிகாரத்தின் கீழ் வரும் குறளாகும்.