உதயநிதி ஸ்டாலின் முதலில் மன்னிப்பு கேட்கட்டும். அவர் சட்டமன்றத்தில் பேசியதும் காவிரி பெருக்கெடுத்து வந்துவிட போகிறதா? என்று த.வெ.க முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

த.வெ.க முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய த.வெ.க-விற்கு நன்றி. எனது பொறுப்பை நான் செவ்வனே செய்வேன். த.வெ.க-விற்கு பீரங்கியாக செயல்படுவேன்.