“இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும். காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் “என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்தார.

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று திங்கள் கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது பேசிய அவர் முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறாக சில விசயங்களை பேசியுள்ளார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது. அவருடைய இந்த பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தமிழகம் முழுதும் த.வெ.க-வினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உதயநிதியின் பேச்சுக்கு த.வெ.க அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய அவரது நீலாங்கரை வீட்டில் இன்று காலையில் போலீசார் குவிக்கப்பட்டார்கள். அதேநேரத்தில், உதயநிதி மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
