மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 11ஆம் தேதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.