காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், இதன் மூலம் உதயநிதியின் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாகச் சாடியுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் அமர மறுக்கும் திமுகவும், அதிமுகவும் விரைவில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும், இந்த அரசியல் மாற்றங்கள் அனைத்திற்கும் உதயநிதிதான் முழு முதற்காரணம் என்றும் அவர் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க – காங்கிரஸ் இடையே அரசியல் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. “இனி காங்கிரஸைக் கிட்டவே சேர்க்கக் கூடாது” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வெளியான செய்திக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், இதன் மூலம் உதயநிதியின் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாகச் சாடியுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் அமர மறுக்கும் திமுகவும், அதிமுகவும் விரைவில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும், இந்த அரசியல் மாற்றங்கள் அனைத்திற்கும் உதயநிதிதான் முழு முதற்காரணம் என்றும் அவர் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
