மின்வெட்டு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பரவலாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நள்ளிரவில் திடீரென 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதனால் கோபமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “தனியார் மருத்துவமனையில் ஜெனரேட்டர் பழுதால் மின்தடை ஏற்பட்டுள்ளது. கேபிள் வயர்கள் எரிந்ததால் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் சிலர் மெத்தனமாக இருந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மின்வெட்டு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.