இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் தாம்பரம் – போடிநாயக்கனூர் இடையே வார இறுதி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. கோடை விடுமுறை, வார இறுதி பயணங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, தாம்பரத்தில் இருந்து வரும் மே 23, 30 மற்றும் ஜூன் 6, 13 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06059), மறுநாள் காலை 11.15 மணிக்கு போடிநாயக்கனூரை சென்றடையும்.