“வசைபாடுவது எதற்கும் தீர்வாகாது. வழிகாணத் தவிக்கும் இளைஞர்களுக்கு நாம் வழிகாட்டுவோம். ஒன்றிணைந்து செயல்படுவோம். பாரதத்திற்காக உழைப்போம்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிச் சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகள் இடப்பட்டதற்காகக் காவல் துறையினர் நோட்டீஸ்களையும், எஃப்.ஐ.ஆர் வழக்குகளையும் பதிவு செய்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி பேசுகையில், தன்னையும் தன் மறைந்த தாயாரையும் வசைபாடிய அந்த குழந்தைகள் அனைவரையும் தான் மன்னிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.