தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் விதிமுறைகளை மீறி சுமார் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதாக தரவுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் 129 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக ‘வி தி லீடர்ஸ்’ (We the Leaders Foundation) அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு, ‘வி தி லீடர்ஸ்’ அறக்கட்டளை சார்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் விவரங்களை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.