மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகளில் மாநில அரசுகளால் மட்டும் முடிவு காண முடியாது என்பதால், அனைத்து அணைகளின் நிர்வாகத்தையும் செயல்பாடுகளையும் மத்திய அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம் மட்டும்தான் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களுக்கு இடையே நதிநீர்ப் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் மட்டுமே எதையும் செய்துவிட முடியாது. இதில் மத்திய அரசுதான் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.