இந்தியாவில் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் சில நாடுகளில் கடலை மிட்டாய் விலையை விட பெட்ரோல் விலை கம்மியாக கிடைக்கிறது. அது எந்த நாடு என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி வண்டி ஓட்டுபவர்களின் பக்கெட்டைப் பதம் பார்த்து வருகிறது. வண்டியை வெளிய எடுத்தாலே “இன்னைக்கு பெட்ரோலுக்கு எவ்வளவு செலவாகுமோ” என்று சாமானிய மக்கள் யோசிக்கும் நிலை தான் உள்ளது. ஆனால், இந்த உலகத்திலேயே தண்ணீரை விடக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்கும் நாடுகள் சில இருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம்! இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் வெறும் ரூ.2 முதல் ரூ.3 ரூபாய்க்கே அங்கெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது. கச்சா எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதும், அந்நாட்டு அரசுகள் வழங்கும் மிகப்பெரிய மானியங்களுமே இதற்குக் காரணம். உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்கும் நாடுகள் குறித்து பார்க்கலாம்.