இணைய வசதி பயன்படுத்த முடியாதவர்கள் நேரடி முறையிலும் விண்ணப்பிக்கலாம். அதற்காக அருகிலுள்ள உணவு வழங்கல் அலுவலகம் அல்லது தாலுகா அளவிலான ரேஷன் சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்று நிரப்ப வேண்டும்.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தகுதியான பயனாளிகளுக்கு தாமதமின்றி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், துறையின் செயல்பாடுகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மக்களுக்கான அரசு என்பதால், பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.
