பள்ளி மற்றும் விடுதிகளின் பெயர்களில் உள்ள சாதிய பெயர்களை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மற்றும் விடுதிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குமாறும் பலரும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் வருகைப் பதிவேட்டில் சாதிப் பெயர் இருக்கக் கூடாது, ஆசிரியர்கள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ சாதி அடையாளத்தைச் சொல்லி மாணவர்களை அழைக்கக் கூடாது, கைகளில் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கயிறுகளை மாணவர்கள் கட்டக் கூடாது என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது.