அரசுப் பேருந்தின் வழித்தடப் பலகையில் அரசியல் கட்சியின் பெயர் எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது நெல்லையில் அரசுப் பேருந்து ஒன்றின் டிஜிட்டல் பெயர்ப்பலகையில் அக்கட்சியின் பெயர் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வழியாகச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றின் பின்புறம் உள்ள பின்புறம் உள்ள எல்.இ.டி திரையில், வழக்கமாக இருக்க வேண்டிய ஊர் பெயருக்குப் பதிலாக, “தமிழக வெற்றிக் கழகம்” மற்றும் “டி.வி.கே.” என்ற பெயர்கள் மாறி மாறித் தோன்றின.

சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இதனைத் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.