புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபானம் கொண்டு வந்தாலும் நடவடிக்கை பாயும் என்று கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டு மயிலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர், புதுச்சேரி – தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸாரால் மறிக்கப்பட்டார். அவரது வாகனத்தைச் சோதனையிட்டபோது, புதுச்சேரியிலிருந்து கொண்டு வரப்பட்ட 1 லிட்டர் 680 மில்லி அளவுள்ள (3 பாட்டில்கள்) மதுபானம் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைச் சட்டவிரோதக் கடத்தல் எனக் கூறி, போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் விரைவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

\