மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.கவும், இழந்த ஆட்சியை கைப்பற்ற அ.தி.மு.க.வும் மல்லுக்கு நிற்கின்றன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி, புதிய கட்சியான த.வெ.க தனித்து நிற்கின்றன.

4% வித்தியாசத்தில் இந்தக் கட்சி ஆட்சி: தினமலர்- சாணக்யா ஃபைனல் சர்வே ரிசல்ட்
மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.கவும், இழந்த ஆட்சியை கைப்பற்ற அ.தி.மு.க.வும் மல்லுக்கு நிற்கின்றன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி, புதிய கட்சியான த.வெ.க தனித்து நிற்கின்றன.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாளை (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் பிரச்சாரங்கள் முடிவுக்கு வர உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி நிறைவு வெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 21-ந் தேதி வரை பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.கவும், இழந்த ஆட்சியை கைப்பற்ற அ.தி.மு.க.வும் மல்லுக்கு நிற்கின்றன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது.
புதிதாக கட்சி தொடங்கி 233 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் பல சிக்கல்கள் தடைகளை சந்தித்தாலும், தொண்டர்கள் ரசிகர்கள் என அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதே சமயம், கருத்துக்கணிப்பு முடிவுகள் என்று எடுத்துக்கொண்டால், அ.தி.மு.க. – தி.மு.க. இடையே தான் நேரடி மோதலாக இருக்கும் என்று நிலவரங்கள் வெளியாகி வருகிறது.
