சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தைப் பகிர்வது போன்ற தனது மிகச்சிறிய முடிவுகளில் கூட தனது கணவரின் தாக்கம் இருப்பதாக சமந்தா ஒரு புதிய பேட்டியில், வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

2023-ம் ஆண்டு குஷி என்ற படத்தில் நடித்திருந்த சமந்தா அடுத்ததாக மா இண்டி பங்காரம் என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். கடந்த 2025-ல் இயக்குனர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டு, தனது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கிய சமந்தா தற்போது சினிமாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமந்தா ராஜ் நிடிமோரு திருமணம் நெருங்கியவர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு எளிமையான நிகழ்வாக இருந்தது. அதன்பின்னர், இருவரும் சமூக ஊடகங்களில் அடிக்கடி தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தைப் பகிர்வது போன்ற தனது மிகச்சிறிய முடிவுகளில் கூட தனது கணவரின் தாக்கம் இருப்பதாக சமந்தா ஒரு புதிய பேட்டியில், வெளிப்படையாகப் பேசியுள்ளார். மேலும், ஒரு பெண்ணின் சமையல் திறனை வைத்து இந்த சமூகம் அவளை எவ்வாறு மதிப்பிடுகிறது மற்றும் அவள் தகுதியற்றவள் என்பதைப் போல் எப்படி உணர வைக்கிறது என்பது குறித்தும் அவர் பேசினார்.
‘99 சதவீத நேரங்களில், நான் என் கணவர் சொல்வதைக் கேட்கிறேன்’
வீட்டிலேயே ஒரு கதைசொல்லி (இயக்குனர்) இருப்பது உங்களுக்கு தொழில்ரீதியாக உதவுகிறதா என்று கேட்கப்பட்டபோது, சமந்தா தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே ஒரு தெளிவான கோட்டை வரைந்தார், அதே நேரத்தில் தனது கணவர் இரண்டிலும் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பதையும் விவரித்தார்.
எனது தனிப்பட்ட வாழ்க்கை தனி, எனது தொழில் வாழ்க்கை தனி,” என்று கூறிய அவர், “ஒவ்வொரு சிறிய விஷயமும் இருவருமாகச் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் என்றார். கலாட்டா பிளஸ் (Galatta Plus) நேர்காணலில் பேசிய அவர், “ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் போஸ்ட் போன்ற எளிமையான விஷயத்தைக் கூட நான் அவரிடம் கேட்டுத்தான் செய்கிறேன், ஏனென்றால் விஷயங்களைப் பற்றிய ஒரு யதார்த்தமான பார்வை அவரிடம் இருக்கிறது. அவர், நம்மை ஒரு தனி உலகத்திற்குள் சுருக்கிவிடும் இந்தத் திரையுலகில் இருந்தபோதிலும் அவர் எவ்வளவு எதார்த்தமாக இருக்கிறார் என்பதையும் விளக்கினார். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் அவரிடம் கலந்துலோசிப்பதை விரும்புகிறேன், 99 சதவீத நேரங்களில் நான் அவர் சொல்வதைக் கேட்கிறேன்,” என்று கூறினார்.
சமந்தா தயாரிப்பில் உருவாகி, ஜூன் 19 (நாளை) வெளியாகவிருக்கும் ‘மா இண்டி பங்காரம்’ (Maa Inti Baangaram) திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுகளின் போது இந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் பின்னணியில் ராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதை சமந்தா பகிர்ந்து கொண்டார்.
‘நீங்கள் ஒரு முழுமையற்ற பெண்ணாக உணர வைக்கப்படுகிறீர்கள்’
இந்த படத்தின் கதை, சாத்தியமில்லாத ஒரு குடும்ப லட்சிய வாழ்வை வாழ்ந்து, தனது மாமியார்-மாமனாரைக் கவர முயற்சிக்கும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் நகர்கிறது. இதன் எழுத்தாளரின் கூற்றுப்படி, இந்தியக் குடும்பங்களில் பெண்கள் மீது நீண்டகாலமாக வைக்கப்படும் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது இக்கதை.
இப்படம் 1980-களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒரு சிறந்த இல்லத்தரசியாக, சிறந்த சமையல்காரியாக, சிறந்த பாடகியாக, குடும்பத்தை ஒன்றுசேர்த்து வழிநடத்தும் ஒருவராக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இன்றும் பொருத்தமானதாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, நிச்சயமாக, இன்றும் கூட எல்லாமே ஒரு தகுதிப் பட்டியலாகத் தான் (checklist) இருக்கிறது, அந்தப் பட்டியலில் உள்ள பாக்ஸ்களை டிக் செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட அழுத்தங்கள் உள்ளன, இதனால் நீங்கள் ஒரு முழுமையற்ற பெண்ணாக உணர்கிறீர்கள். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் அப்படி உணர வைக்கப்படுகிறீர்கள்.
எனவே அந்தத் தகுதிப் பட்டியலில் கூட, நான் பெரும்பாலான பாக்ஸ்களை டிக் செய்கிறேன் என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு சமைக்கத் தெரியாது. எனக்குப் பாடத் தெரியாது,” “அப்படியென்றால் எங்களைப் போன்றவர்களுக்கு என்ன நடக்கும்? ஒரு குடும்பத்தில் ‘பங்காரம்’ ஆக இருக்க எங்களுக்குத் தகுதி இல்லையா?” என்று என்று கேட்கப்பட்டது. தங்கம் என்று பொருள்படும் “பங்காரம்” என்ற வார்த்தை, தெலுங்கு குடும்பங்களில் அன்பிற்குரிய மகள் அல்லது மருமகளைக் குறிக்க பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒரு அன்பான சொல்லாகும், இதுவே படத்தின் தலைப்புக்கும் அடிப்படையாகும்.
ஒவ்வொரு பெண்ணும் வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தனித்துவமான விஷயம் அவளிடம் இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறிய அவர், “இந்த சமூகம் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறதோ அப்படி அல்லாமல், நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதற்காக ஒரு குடும்பம் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார். ‘ஓ பேபி’ திரைப்படத்திற்குப் பிறகு பி.வி. நந்தினி ரெட்டியுடன் மீண்டும் இணையும், சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ‘மா இண்டி பங்காரு’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
ராஜ் நிடிமோரு, ‘தி பேமிலி மேன்’ (The Family Man) மற்றும் ‘சிட்டாடல்’ (Citadel) ஆகிய தொடர்களுக்காக அறியப்பட்ட ராஜ் மற்றும் டிகே (Raj and DK) என்ற திரைப்பட தயாரிப்பு ஜோடியில் ஒருவராவார். அவர் முதன்முதலில் 2021-இல் ‘தி பேமிலி மேன் சீசன் 2’ படப்பிடிப்பின் போது சமந்தாவுடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் டிசம்பர் 2025-இல் திருமணம் செய்து கொண்டனர்.
