சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், நடிகர் விஜய்யை ‘லாலிபாப் பேபி’ என விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ‘பெண் இனத்தின் பாதுகாவலர்’ எனப் புகழாரம் சூட்டினார்.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே மேடையில் வாக்கு சேகரித்தனர்.
தமிழக அரசியலில் புதிதாக களம் கண்டுள்ள நடிகர் விஜய் குறித்துப் பேசிய பிரேமலதா, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள தம்பி விஜய், முதலில் தன்னை நிரூபிக்க வேண்டும். அரசியலில் நுழையும்போதே எதிராளிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. கேப்டன் விஜயகாந்த் எப்படி தேர்தல்களைச் சந்தித்து தனது வாக்கு வங்கியை நிரூபித்தாரோ, அதேபோல் தம்பியும் தனது பலத்தை முதலில் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகுதான் ‘இருமுனை போட்டி’ என்பது போன்ற வசனங்களை அவர் பேச வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், 75 ஆண்டுகால அனுபவம் கொண்ட கட்சிகள் இருக்கும் இடத்தில், இப்போதுதான் வந்திருக்கும் நீங்க ‘லாலிபாப் சாப்பிடும் குழந்தை’. அரசியலில் நீங்க ஒரு ‘லிட்டில் பாய்’ (Little Boy) தான் என்று விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
அரசியலும் சினிமாவும் ஒன்றல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சினிமா என்பது ஒரு தொழில், ஆனால் அரசியல் என்பது மக்கள் சேவை. எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கை காட்டுவது அரசியல் கிடையாது. களத்தில் இறங்கி மக்களோடு மக்களாகப் போராடுபவர்கள் தான் அரசியலில் வென்றிருக்கிறார்கள் என்றார்.
‘நீங்க இப்பதான் லாலிபாப் சாப்பிடுகிற பேபி’… விஜய்யை தாக்கிய பிரேமலதா விஜயகாந்த்
சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், நடிகர் விஜய்யை ‘லாலிபாப் பேபி’ என விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ‘பெண் இனத்தின் பாதுகாவலர்’ எனப் புகழாரம் சூட்டினார்.
Written byWebDesk
15 Apr 2026 22:21 IST
/indian-express-tamil/media/media_files/2026/04/15/prema-latha-vijay-2026-04-15-22-14-19.jpg)
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே மேடையில் வாக்கு சேகரித்தனர்.
தமிழக அரசியலில் புதிதாக களம் கண்டுள்ள நடிகர் விஜய் குறித்துப் பேசிய பிரேமலதா, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள தம்பி விஜய், முதலில் தன்னை நிரூபிக்க வேண்டும். அரசியலில் நுழையும்போதே எதிராளிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. கேப்டன் விஜயகாந்த் எப்படி தேர்தல்களைச் சந்தித்து தனது வாக்கு வங்கியை நிரூபித்தாரோ, அதேபோல் தம்பியும் தனது பலத்தை முதலில் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகுதான் ‘இருமுனை போட்டி’ என்பது போன்ற வசனங்களை அவர் பேச வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், 75 ஆண்டுகால அனுபவம் கொண்ட கட்சிகள் இருக்கும் இடத்தில், இப்போதுதான் வந்திருக்கும் நீங்க ‘லாலிபாப் சாப்பிடும் குழந்தை’. அரசியலில் நீங்க ஒரு ‘லிட்டில் பாய்’ (Little Boy) தான் என்று விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
அரசியலும் சினிமாவும் ஒன்றல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சினிமா என்பது ஒரு தொழில், ஆனால் அரசியல் என்பது மக்கள் சேவை. எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கை காட்டுவது அரசியல் கிடையாது. களத்தில் இறங்கி மக்களோடு மக்களாகப் போராடுபவர்கள் தான் அரசியலில் வென்றிருக்கிறார்கள் என்றார்.
நீங்க விரும்பும் செய்திகள்
கணவன் முன்பே மனைவியிடம் ஆபாச பேச்சு… வாட்டர்மெலன் திவாகர் மீது தாக்குதல்; கொந்தளித்த மா.கா.பா
ஜீனியஸ் கண்ணதாசன், அவரது பாட்டையே திருத்திய கங்கை அமரன்: ரஜினி படத்தில் இந்த பாட்டு சூப்பர் ஹிட்டு
52 வயதிலும் கட்டுமஸ்தான உடல்… சீக்ரெட் டிப்ஸ் பகிர்ந்த பிரபல நடிகை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முதல்முறையாக பேரணியில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பிரேமலதா, முதல்வர் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குவதற்கு அவர் மேற்கொள்ளும் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும்தான் காரணம் என்பதை இன்று புரிந்துகொண்டேன். ஆண்கள் நிறைந்த அந்தப் பேரணியில் நான் ஒரு பெண் மட்டுமே இருந்த நிலையில், முதலமைச்சர் ஒவ்வொரு நிமிடமும் திரும்பிப் பார்த்து எனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டே இருந்தார். அதைப் பார்த்தபோதே அவர் பெண் இனத்தின் பாதுகாவலர் என்று நான் முடிவு செய்துவிட்டேன். அவர் எனக்குக் கொடுத்த மரியாதையை ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே கிடைத்த மரியாதையாகப் பார்க்கிறேன் என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலினின் பணி தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்றும் கூறி பிரேமலதா விஜயகாந்த் தனது உரையை நிறைவு செய்தார். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மேடைக்கு ஒன்றாகப் பேரணியாக வந்தது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.