விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் அஞ்சன் ராமச்சந்திர நாத்தின் மகனான வேங்கடபதி வேலாயுதம், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து இந்தத் தேர்வை எழுதினார்.

தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள இளநிலை நீட் தேர்வு முடிவுகளில், தமிழக அளவில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் அஞ்சன் ராமச்சந்திர நாத்தின் மகனான வேங்கடபதி வேலாயுதம், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து இந்தத் தேர்வை எழுதினார். இவர் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் (99.99915 பெர்சண்டைல்) பெற்று, தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 12-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
