Total MBBS seats in India 2026: இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன.

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் (MBBS) இடங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,36,939 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளதாக NMC அறிவித்துள்ளது. நடப்பாண்டில் அரசு கல்லூரிகளை விட தனியார் மருத்துவக் கல்லூரிகளிலேயே மிக அதிக அளவில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாநில அளவில் கர்நாடகா அதிகபட்ச இடங்களுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் மருத்துவ இடங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.

அரசு vs தனியார் கல்லூரிகள்: ஒரு பார்வை

தேசிய மருத்துவ ஆணைய தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் விவரம்:

You missed