18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்; ஆர்வமுள்ளவர்கள் கலந்துக் கொள்ள சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் மாணவரல்லாதோர்களுக்கான மாவட்ட அளவிலான உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம்கள் வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.                                                                 
இதுதொடர்பாக மாவட்டஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; 

சிவகங்கை மாவட்டத்தில் 2026-ம் ஆண்டிற்கான உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. அந்தவகையில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, ஹாக்கி,  கோ-கோ ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகள்  வருகின்ற 17.04.2026 (வெள்ளிக்கிழமை) முதல் 01.05.2026 (வெள்ளிக்கிழமை) வரை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இக்கோடைகால பயிற்சி முகாமில், 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடத்தப்படும். இதற்கான பயிற்சி கட்டணம் ஏதும் கிடையாது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். 

மேலும், இப்பயிற்சி முகாம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்களை 7401703503 என்ற அலைபேசி எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை 04575 – 299293  என்ற தொலைபேசி எண்ணிலும் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.

எனவே, சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவியர் மற்றும் மாணவரல்லாதோர்கள் இக்கோடை கால பயற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.